பெண் ஒருவர் காவல்துறையினரை உடனடியாக தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் ராட்சத நண்டு ஒன்று நுழைந்துள்ளது. chinese mitten crab என்ற வகையை சார்ந்த அந்த நண்டு பத்து இன்ச் நீளம் கொண்டது. இந்த வகை நண்டுகள் பொதுவாக ஆசியாவில் தான் இருக்கும். ஆனால் சமீப காலமாக இந்த நண்டுகள் ஜெர்மனியில் இருக்கும் நதிகளில் தென்படுகின்றன. பெண்ணின் வீடு ரைன் நதியின் அருகே அமைந்துள்ளது. எனவே அந்த நதியில் இருந்து தான் நண்டு ராட்சத நண்டு வந்திருக்க வேண்டும்.
அதை பார்த்து பயந்துபோன பெண் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் குப்பை கூடையை வைத்து நண்டை மடக்கிப் பிடித்து வைத்திருந்தார் அந்தப் பெண். வீட்டிற்கு வந்த காவல்துறையினர் நண்டை பெட்டி ஒன்றில் எடுத்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது போன்ற சிறிய காரணத்திற்காகவும் காவல்துறையினரை மக்கள் அழைப்பது வெளிநாடுகளில் சகஜம் என்பது குறிப்பிடத்தக்கது.