Categories
தேசிய செய்திகள்

மனைவியை கண்டு கடுப்பான கணவன்….. கோடரியால் தலையை பிளந்த கொடூரம்…. உ.பியில் அரங்கேறிய துயரம் …!!

சந்தேகத்தில் மனைவியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்திற்கு கணவன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்னர் யாதவ்-விமலா தம்பதியினர். கின்னர் தனது மனைவி விமலா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்து வந்தார். அதோடு அக்கம்பக்கம் இருந்தவர்களும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிகாந்த் யாதவ் என்பவருடன் விமலாவுக்கு தொடர்பு இருப்பதாக கின்னரிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கிங் சென்றுவிட்டு கின்னர் வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிகாந்திடம் தனது மனைவி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிகவும் கோபம் கொண்டார்.  இதனால் அருகில் இருந்த கோடாரியை எடுத்து ரவிகாந்த் தாக்குவதற்கு கின்னர் முயற்சித்தார்.

இதனால் ரவிகாந்த் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றார். ஆனால் கோபம் தீராத கின்னர் தனது மனைவியின் தலையை வெட்டியுள்ளார். அதன் பிறகு வெட்டி துண்டாக்கப்பட்ட தலையுடன் 3 கிலோமீட்டர் தூரம் காவல் நிலையத்திற்கு நடந்து சென்றார்.

வெட்டப்பட்ட தலையுடன் கின்னர் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். காவல்துறையினரிடம் ரவிகாந்தைத்தான் கொலை செய்ய நினைத்ததாகவும் கோபத்தில் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் கின்னர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |