Categories
தேசிய செய்திகள்

“ஹத்ராஸ் சம்பவம்” பெண்ணின் உடல் இரவில் தகனம்…. நான் எடுத்த முடிவு அது… ஒப்புக்கொண்ட ஆட்சியர்…!!

கூட்டு பலாத்கார சம்பவத்தில் பெண்ணின் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டதற்கு தான்தான் காரணம் என மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் இரவோடு இரவாக காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்த காவல்துறையினரின் செயலுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஆட்சியர் பர்வீன் குமார் லக்சர் கூறுகையில், “இரவு பெண்ணின் உடல் தகனம் செய்யவேண்டும் என்ற முடிவு என்னால் எடுக்கப்பட்டது. சிலர் தங்களின் சொந்த நலனுக்காக ஜாதி பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்று ரகசிய தகவல் கிடைத்ததால் பெண்ணின் உடலை இரவே தகனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதை தவிர உயர் அதிகாரிகள் அல்லது அரசு என யாரும் உடல் தகனம் செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார். ஆட்சியரை போன்ற பல அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |