கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
அறந்தாங்கி அருகே இருக்கும் மணமேல்குடியில் மளிகை கடை வைத்திருப்பவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு 9 வயது சிறுமி அடிக்கடி பொருள் வாங்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று சிறுமி பொருள் வாங்கச் சென்றபோது முகமது ராவுத்தர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அழுதுகொண்டே கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முஹம்மது ராவுத்தரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.