Categories
மாநில செய்திகள் வணிக செய்திகள்

உங்களுக்காக நாங்கள் கடன் வாங்க முடியாது… நிர்மலா சீதாராமன் அதிரடி…!!!

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகைக்காக  மத்திய அரசு கடன் வாங்க முடியாது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்து பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சரியான முடிவு எட்டப்படாததையொட்டி நேற்று திரும்பவும் விவாதிக்கப்பட்டது. மாநில அரசுக்கு வழங்க வேண்டிய  ஜி எஸ் டி நிலுவைத் தொகைக்காக தற்போது மத்திய அரசால் கடன் வாங்க இயலாது என்று கூறப்பட்டது.

மேலும் மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி மூலம் இரண்டு கடன் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் கூறப்பட்டது.இதை 12 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன எனினும் சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் ஜி எஸ் டி நிலுவை தொகை வழங்கும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு உள்ளது எனவும் மாநிலங்களுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை முடித்தவுடன் விவகாரத்தில் முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |