ராகுல் காந்தி மற்றும் பரூக் அப்துல்லா இருவரும் சீனாவிற்கு சென்ற குடியேறலாம் என பாஜக சாடியுள்ளது.
காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது சீனாவின் ஆதரவுடன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது பாஜக.
இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “ஜனநாயக செயல் முறை குறித்து தங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தால் அது பற்றிப் பேசுவதற்கு முழு அனுமதியும் உங்களுக்கு உண்டு. ஆனால் வேறு ஒரு நாட்டுடன் கைகோர்த்து கொண்டு எதையாவது நிலைநிறுத்த நினைத்தால் அது கண்டிக்கத்தக்க ஒன்று.
இது தேச துரோகத்திற்கு சமம். ராகுல் காந்தி வெளியிட்டுவரும் அறிக்கைகளை கவனித்தால் ராகுலும் பரூக் அப்துல்லாவும் ஒரு நாணயத்தில் இருக்கும் இரண்டு பக்கங்கள் என்பது புரிந்துவிடும். பிரதமர் மீது இருக்கும் வெறுப்பு நாட்டை வெறுக்கும் அளவுக்கு அவர்களை மாற்றியுள்ளது. வேண்டுமென்றால் அவர்கள் சீனாவில் போய் குடியேறி கொள்ளட்டும்” என தெரிவித்தார்.