Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் திரளாக திரண்ட பொதுமக்கள்…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயம்மாளின் இறுதி ஊர்வலம் தற்பொழுது நடந்து வருகின்றது. முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில நாட்களுக்கு முன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 93 வயது நிறைவடைந்த தவசாயம்மாள் நேற்று நள்ளிரவு இயற்கை எய்தினார்.

தாயாரின் மறைவு செய்தி கேட்டு முதலமைச்சர் அவர்கள் காரில் உடனே சொந்த ஊருக்கு விரைந்தார். தன் தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.தற்போது நடந்து வரும் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள்,தொண்டர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கலை தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தற்பொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

Categories

Tech |