தமிழக முதலமைச்சர் தாயாரின் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் அதில் இருக்கின்ற மயானத்தில் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர்.
முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் மறைந்த முதலமைச்சரின் தாயார் உடல் அவரின் வீட்டிலிருந்து ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையத்தில் இருக்கின்ற மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.