அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி சோதனையை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை முடித்த அந்நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் மூன்றாம் கட்ட பரிசோதனையை தொடங்கியது.
அந்த மூன்றாம் கட்ட பரிசோதனையில் 60,000 பேருக்கு பாதுகாப்பான வகையில் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நிறுவனம் தடுப்பூசி பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.