Categories
உலக செய்திகள்

பூனைக்குட்டி என்று நினைத்து… புலிக்குட்டியை வாங்கி …கொஞ்சி விளையாடிய தம்பதி… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

பிரான்ஸ் நாட்டில் பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லே ஹார்வே என்ற நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் சவன்னா பூனை குட்டி வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளனர். அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் விளம்பரம் மூலமாக 5 லட்சம் கொடுத்து பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கியுள்ளனர். அதன் பிறகு சில நாட்களில் கூட்டில் ஏற்பட்ட உருவம் மாற்றத்தை கண்டு அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனையடுத்து அவர்கள் வளர்த்து வந்தது இந்தோனேசியாவின் சுமத்ரான் வகை என்று தெரியவந்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடித்த விசாரணைக்கு பின்னர் பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்தியதாக புலிக்குட்டியை வளர்த்து வந்த தம்பதி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பிறகு அவர்களுக்கு அறிவுரை கூறி விடுவித்தனர்.

Categories

Tech |