Categories
பல்சுவை வானிலை

மிக மிக கனமழை பெய்யும்… எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்…!!!

காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்து உள்ளதால் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காக்கிநாடாவில் கரையை கடந்துள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும்,தெலுங்கானாவில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதுமட்டுமன்றி கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில், தெற்கு கொங்கண், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராதாவாடா ஆகிய பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என்றும், வடக்கு ஆந்திர பிரதேசம், ராயல் சீமா, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதி, தெற்கு ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர்,விதர்பா ஆகிய பகுதிகளில் தனித்து விடப்படும் அளவிற்கு மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Categories

Tech |