நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆமாங்க..! நான் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன். பெரியார் என்பது யார் ? பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சினைக்கு குரல் கொடுக்கின்றேன். பெண்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பெரியாரிஸ்ட் என்று சொல்லும்போது அவர் சொல்லும் அனைத்தையும் நாம தலையாட்டிட்டு போக முடியாது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், தலித் மக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடுமைகளுக்கும் பெரியார் குரல் கொடுத்தார். அதனாலதான் நான் என்னை பெரியாரிஸ்ட் என்று சொல்கின்றேன். பாஜகவும் அதை தானே செய்கிறது. தலித் மக்களுக்கு நல்லது செய்கின்றது பாஜக, பெண்களுக்கு எதிராக ஒரு பிரச்சினை வரக்கூடாது என்று தான் பாஜக பாடுபடுகின்றது என்று குஷ்பு தெரிவித்தார்.
பெரியாரிஸ்ட்க்கும் பிஜேபிக்கும் நிறைய முரண்பாடு இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கே ? எப்படி ? என்று சொல்லியத்துடன் எல்லாத்துக்கும் முரண்பாடு இருக்கின்றது. பெரியாரிய கொள்கைகளை பேசுபவர்கள் அரசியல் பேசக்கூடாது. திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் தான் பேசிகிட்டு இருக்காங்க. பெரியார் அவர்கள் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி போனவர். எந்த ஒரு மேடையிலும் எந்த ஒரு கட்சி காரங்க தமிழ்நாட்டுல பெரியாரை பற்றி பேசக்கூடாது என நடிகை குஷ்பு பதிலளித்தார்.பாஜகவை பொருத்தவரை பெரியாரை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் குஷ்பு நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று சொல்வது நிர்வாகிகளை முணுமுணுக்க வைத்துள்ளது.