மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கொடுக்கல் வாங்கல் ஓரளவு சரியாகும்.
எதிர்த்து செயல்பட்டார்கள் விலகிச்செல்வார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். வீண் விவகனங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். எந்த ஒரு பஞ்சாயத்துகளிலும் கலந்துக் கொள்ள வேண்டாம். யாருக்கும் தயவுசெய்து அறிவுரைகள் சொல்ல வேண்டாம்.
இன்று பங்குச் சந்தையில் உள்ளவர்கள் பொறுமையாக செல்லவேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று காதலிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். கணவன் மனைவி இருவருக்கும் எந்த விதத்திலும் பிரச்சனையில்லை சுமுகமாகவே இன்றையநாள் அமையும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.