நாங்கள் என்றுமே தனித்தே செயல்படுவோம் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் மத்திய பகுதியில் இயங்கி கொண்டிருக்கக்கூடிய காந்தி மார்க்கெட் வளாகத்தில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தேசிய தலைவருமாகிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இந்த பகுதியில் இருக்கக்கூடிய சில சமூக விரோதிகள் அசிங்கப்படுத்தி, அதை உடைத்து, அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அது சார்பாக முக்குலத்தோர் புலிப்படையினுடைய நிர்வாகிகள் திருச்சி மண்டல நிர்வாகிகள் காவல் அதிகாரிகள் இடத்திலேயே புகார் கொடுத்திருக்கிறார்கள். அதிலே ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் இருக்கக்கூடிய இடத்தில் கணவன்மார்கள், அண்ணன், தம்பிமார்கள் வேலைக்கு செல்லக்கூடிய நேரம் பார்த்து இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் வீட்டு கதவை தட்டுவதும், கல்லால் எறிவதும் அந்த பெண்களை தவறான பாதைகளுக்கு அழைப்பதுமான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது தொடர்பாகவும் காவல் அதிகாரி இடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரிகள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
இந்த பகுதியில் இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உத்திரவாதத்தை காவல்துறை ஆணையர் இடத்திலே பதிவு செய்திருக்கிறோம். உரிய பாதுகாப்பு வழங்குவதாக முதலமைச்சரும், அவருக்கு கீழே இயங்கக்கூடிய காவல்துறையும் எங்களுக்கு உறுதியளிக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காகவும், அவர்களுக்கு ஆறுதல் தரும் நோக்கத்தில் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தனி சின்னம் இந்த அமைப்புக்கு வந்து இன்னும் வழங்கப்படவில்லை. இது போன்ற அமைப்புகள் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒரு சுயேச்சை சின்னங்கள் தான் வழங்கப்படும்.
முக்குலத்தோர் சமுதாயம் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகமாக இருப்பினும் கூட ஆண்டாண்டு காலமாக திராவிட கட்சிகளுக்கு அடிபணிந்து இருக்க கூடிய நிலையில் தான் இருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் தான் தனக்கான ஒரு முக்கியத்துவம் வேண்டும், தனக்கான உரிமைகளையும் பெறக்கூடிய ஒரு அமைப்பு நமக்கு வேண்டும், தன்னுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலும் உயர் அதிகாரி இடத்திலும் தெரிவிக்கக்கூடிய ஒரு ஆளுமை மிக்க ஒரு தலைமை வேண்டும், அப்படி என்ற ஒரு நிலைக்கு வந்திருக்காங்க. அந்த அடிப்படையில் வரக்கூடிய தேர்தலில் நடக்கக்கூடிய தேர்தல் நிலவரங்கள் பொறுத்துதான் முக்குலத்தோர் புலிப்படை மாநில நிர்வாகிகளுடன், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆலோசித்து முடிவெடுக்கும்.