Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்கள்… மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்துள்ளது. தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயமுத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |