கர்நாடக மாநிலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அங்கு வசித்து வரும் அந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவர்கள் அங்கு பொம்மை வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளனர். கடந்த பத்தாம் தேதி கொட்டி தீர்த்த கன மழையால் அவர்கள் தங்கியிருந்த கொட்டகை நீரில் மூழ்கியது. அதனால் அப்பகுதியில் இருந்து சங்கொலி ராயண்ணா ரயில் நிலையம் பின்புறம் உள்ள பிளாட்பாரம் ஒன்றில் அந்த குடும்பம் தங்கியிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் பிளாட்பாரம் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற நபரை தேடிச் சென்றனர். திங்கட்கிழமை அதிகாலை போலீசார் கண்ணில் சிக்கிய தினேஷ், உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். அதனால் அவர் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் தினேஷ்யை கைது செய்துள்ளனர்.