மானுட சமூகம் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது. நாம் எந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ, அந்தளவுக்கு முறைகேடுகளும், மோசடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இருந்தாலும் இதுதொடர்பாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன.
தற்போது ஒரு சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறி உள்ளது.சென்னை கீழ்பாக்கத்தில் பிரவீன் குமார் என்பவர் Teamviewer, Quick support என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியை பதிவிறக்கம் செய்த மறு நிமிடமே பிரவீன்குமார் வங்கிக் கணக்கிலிருந்து 17,000 திருடப்பட்டது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ரூபாய் 17,000 சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.