நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 8 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 107 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொடருக்காக பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்து 73 ஆயிரத்து 14 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.