தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும். அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி அடையாத மாணாக்கர்களுக்கு அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.