பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடையில் எஞ்சிய தாள்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
வாகன நெரிசல் காரணமாக டெல்லியில் வழக்கமாக காற்று மாசு அதிகமாகவே காணப்படும். குளிர் காலங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்தது. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டு வாகனங்கள் இயக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக காற்று மாசு உயரத் தொடங்கியது.
பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட டெல்லியைை சுற்றியுள்ள மாநிலங்களில் அறுவடையில் எஞ்சிய தாள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்று தரக் குறியீட்டு எண் 332 ஆக பதிவாகியுள்ளது.