Categories
தேசிய செய்திகள்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆபத்து…?

திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமாருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர், அவர்கள் டெல்லியில்  முகாமிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களின் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.  அவர்களில் மூத்த தலைவர் திரு சுதீப் ராய் வர்மன் தலைமையிலான 7 பேர் முதலமைச்சர் திருப்பி ப்ளாக் குமார் எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முகாமிட்டுள்ளனர். முதலமைச்சர் திரு பிப்ளாப் குமார் சர்வாதிகாரமாக செயல்படுவதால் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு மேலும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கொரோனா அறிகுறி இருப்பதால் அவர்களால் டெல்லி வர இயலவில்லை என்றும் அதிர்ப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |