மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
குண்டாறு அணை மீண்டும் நிரம்பிய நிலையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 88.20 இருந்த நீர்மட்டம் இன்று காலையில் 89.15 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1,669.45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 604.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் நேற்று 96.85 அடியாக நீர்மட்டம் இருந்தது. இன்று காலையில் 101.57 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 33 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
ஒரே நாளில் 4.72 கனஅடி தண்ணீர் உயர்ந்துள்ளது. இதேபோல 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் இன்று 66.90 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நம்பியாறு, வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து என்பது அதிகரித்த நிலையில் இருக்கிறது.
ஏற்கனவே குண்டாரு அணை என்பது நிரம்பிய நிலையில் தற்போது மீண்டும் குண்டாறு அணை தனது மொத்த கொள்ளளவான 36.10 அடியை எட்டி உள்ளது. மீண்டும் அணைக்கு வரை இருந்த 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவி நைனார் அணைப்பகுதியில் 52 மில்லி லிட்டர் கன அளவு பதிவாகி இருக்கு.
அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதி 45 மில்லி லிட்டர் கன அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரப்பு அதிகமாகி உள்ளது.