சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை இறந்ததாக கூறி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் விடிய விடிய வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் வசிப்பவர் சரவணன் இவரது அண்ணன் பாலசுப்பிரமணி குமார் என்பவர் இறந்துவிட்டதாக கூறி நேற்று குளிரூட்டும் சவபெட்டிகாக தகவல் கொடுத்துள்ளனர். குளிரூட்டி சவப்பெட்டி பணியாளர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து பெட்டியை வைத்துவிட்டு மதியம் வருவதாக கூறி சென்றுள்ளனர். அதன்படி இன்று மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்தவர்கள் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தவர்கள் முதியவர் பாலசுப்ரமணி குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறப்பதற்கு முன்னதாக முதியவரை குளிரூட்டி சவபெட்டியில் வைத்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.