10-ம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 90- ற்க்கு மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்று திறனாளி ஒருவருக்கு பத்தாவது மட்டுமே படித்துள்ள காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இருப்பினும் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பார்களா என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. என்பது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.