நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படியாவது வெற்றி பெற்று இந்த முறை கோப்பையை வாங்கி விட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வாழ்வா ? சாவா என்ற நிலைக்கு சென்று நேற்றைய 29 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 147 ரன் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறாத பட்சத்தில் இந்த ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் சுற்ற்றுக்கு செல்லும் வைப்பில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் என்பதால் இந்த போட்டியில் ரசிகர்களின் அதிகம் காணப்பட்டது. சென்னை அணி ஆடிய கடந்த போட்டு (பெங்களூருவுக்கு எதிரான) தோல்வியை தழுவிய போது தோனி பேசியதை இந்த போட்டியில் நிறைவேற்றியுள்ளார்.
அப்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கை பொருத்தவரை எங்களுடைய பிளேயர்ஸ் மிகவும் மெதுவாக ஆடி விட்டார்கள். பவுலிங்கை பொருத்தவரை எங்களிடம் எல்லாம் சரியாக இருக்கிறது. பேட்டிங்கில் நாங்கள் மிகவும் மெதுவாக ஆடியது தான் தோல்விக்கு காரணம். இதுவரைக்கும் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வோமா ? இல்லையா ? என்ற ஒரு பயத்திலேயே எங்களுடைய வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான ஒரே ஒரு வாய்ப்பு நாங்கள் எந்த போட்டியிலும் தோற்கமால் அடித்து ஆடவேண்டும். அனைத்து வீரர்களும் அடித்து ஆடுவோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதே போல நேற்றைய போட்டியில் சென்னை வீரர்கள் அடித்து ஆடுவதை நாம் பார்க்க முடிந்தது.