Categories
அரசியல் மாநில செய்திகள்

EVKS இளங்கோவன் சூப்பர்… அவரிடம் ஈகோ இருக்காது…. புகழ்ந்து தள்ளிய குஷ்பு …!!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் ஈகோ இல்லாதவர் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தார்.

பாஜகவில் இணைந்த குஷ்பு நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கணவரின் நிர்பந்தம் காரணமாகத்தான் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்ததாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, என்னுடைய அரசியல் பயணம் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னுடைய கணவர் சுந்தர் சி அவர்களை எங்கேயாவது பார்த்ததுண்டா ? ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி இருந்தால்தான் என்கூட வருவாரே தவிர, எங்கள் இரண்டு பேரையும் எங்கேயாவது சேர்ந்து பார்த்ததுண்டா ? அவர்கள் ,மீது இருக்கும் கனத்தை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது சும்மா பழியை சுமத்துவது என்பது அவர்களின் புத்தி எப்படி போகின்றது என்று தெரிகின்றது.

வெறும் நடிகையைத்தான் பார்த்தோம் என்று சொல்வதும்,  கணவரின் வலியுறுத்தல் தான் அவர் அங்கு சென்றால் என்று சொல்வதும்… அவர்களின் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்று சொல்ல முடியும். நான்கு வருடமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவர் இருக்கும் போது எல்லா நிகழ்ச்சியிலும் என்னை பார்த்திருப்பீர்கள். இல்லாமல் இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.  நான் மேடைக்கு சென்றால் அந்த அம்மா பேசி போயிட்டா  மக்கள்  போய் விட்டார்கள் என்று அவர்  முன்னாடியே பேசிவிட்டு நீ வந்து கடைசியில் பேசு என்று சொல்வார். என்னைப் பார்ப்பதற்கு கூட்டம் வரும்.

நான் ஒரு நடிகையாக கட்சிக்கு வந்தேன் என்று இன்னைக்கு சொல்கிறார்கள். காங்கிரஸில் வெறும் நடிகையாக தான் பார்த்தோம் என்று சொல்கிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரைக்கும், கல்கத்தாவிலிருந்து பீகார் வரைக்கும், ஆந்திராவிலிருந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம் எல்லாமே சுத்தும் போது நான் ஒரு நடிகையாக காங்கிரஸ்காரர்களுக்கு தெரிந்ததா ?  கூட்டம் சேர்க்கும் போது என்னை கூட்டிட்டு போவார கள்..

அப்போது நான் ஒரு நடிகை என்று தெரியவில்லையா ? இன்னைக்கி வெளியில் வந்ததும் வெறும் நடிகையாக தான் பார்த்தோம் என்பது பெண் புத்திசாலியாக இருக்க கூடாது. ஒரு பெண் தன்னுடைய திறமையினால் மேல வரக் கூடாது. அப்படி வந்தாலும் அவன் முட்டாள் மாதிரி நடிக்க வேண்டும். நான் ஓப்பனாக நடிக்கிறேன், நடிகையாக இருக்கின்றேன். நீங்கள்  தலைவர் என்கிற வேஷம் போட்டு நடிக்கிறீர்களே..! இது எந்த விதத்தில் நியாயம் என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |