சட்டவிரோதமாக இந்தியா உருவாக்கியிருக்கும் யூனியன் பிரதேசத்தை எதிர்ப்பதாக சீனா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அருணாச்சல பிரதேச பகுதிகளில் 8 பாலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தில் 8 பாலங்கள் என மொத்தம் 44 பாலங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைப்பகுதியில் திறந்து வைத்தார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போது திறக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுமானங்கள் இரண்டு நாடுகளுக்கிடையே மீண்டும் பதட்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
இந்திய சட்டத்திற்கு விரோதமாக அமைத்த லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா அரசு அங்கீகரிக்கவில்லை என்ற உண்மையை நான் முதலில் உறுதி படுத்துகிறேன். எல்லைப்பகுதியில் மோதலை ஏற்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை எதிர்த்து நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.
இந்தியா தரப்பில் எல்லையில் ராணுவத்தை நிறுத்துவதும், கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்துவதும் இரண்டு நாடுகளுக்கிடையே பதட்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தி எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க நாங்கள் இந்தியா தரப்பை கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறினார்.