Categories
உலக செய்திகள்

உலக நாடுகளுக்கே ஷாக்…! மிரளும் ஆய்வாளர்கள்….! பூமியின் வேகத்தை குறைக்கும் சீனா …!!

சீனாவில் உள்ள த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டதால் பூமி சுற்றும் வேகம் 0.06 வினாடிகள் குறைந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

உலக அளவில் மிகப்பெரிய அணை த்ரீ கோர்ஜஸ். சீனாவில் உள்ள இந்த அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 17 வருடங்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையால் நகரங்கள் பல மூழ்கும் அபாயத்தில் உள்ளது. த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கத்திற்கு மாறாக நீர்மட்டத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் என்ற அச்சத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அவர்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். மற்றொரு வியப்பு தரும் தகவல் என்னவென்றால் இந்த அணையினால் அதிக அளவு தண்ணீர் ஒரே இடத்தில் தேங்குவதால் சுற்றும் பூமியின் வேகம் 0.06 வினாடிகள் குறைந்ததாக நாசா உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலர் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

“த்ரீ கோர்ஜஸில் 40 இலட்சம் கோடி கிலோ கிராம் நீர் தேங்கி இருப்பதால் இருப்பதாலும் கடலின் மட்டத்திலிருந்து அணை 181 மீட்டர் உயரத்தில் இருப்பதனாலும் பூமி சுற்றும் வேகம் 0.06 வினாடி குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. பல காரணங்களால் பூமி சுற்றும் வேகம் அவ்வப்போது மாற்றத்தை சந்திப்பதால் இந்த அணை ஏற்படுத்தும் மாற்றத்தினால் எந்த பாதிப்பும் இல்லை” என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

Categories

Tech |