Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில்… இனி காலதாமதம் இல்லை… உடனே பெற்றுக் கொள்ளலாம்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இன்று முதல் கால தாமதமில்லாமல் அனைத்துப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்,அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பொதுவினியோக திட்டத்தில் சீரமைத்து,அனைத்து பயனாளிகளுக்கும் உரிய இன்றியமையா பண்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உடற்கூறு முறையிலான சரிபார்ப்பு ஒருங்கிணைந்த ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’இத்திட்டம் கடந்த 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றியமையா பண்டங்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அவ்வகையில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றியமையா பண்டங்களை எந்தவித சிரமமும் இல்லாமல் பெற்று செல்லும் வகையில் விற்பனையை எந்திரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. அதனால் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமம் இல்லாமல் அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம். அதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்”என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |