நடிகை நஸ்ரியா வாங்கிய சொகுசு கார் விமர்சனங்களுக்கு இளம் நடிகை அஹானா கிருஷ்ணா கொடுத்துள்ள பதிலடி..,
பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி போர்ஸ் 911 கேமிரா எஸ் என்ற நவீன கார் ஒன்றை வாங்கி உள்ளனர். இது மணிக்கு 308 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல கூடியது , காரின் ஷோரூம் விலை 1.90 கோடி ரூபாய் ஆகும். பகத் பாசில் தான் வாங்கிய கார் அருகில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர்க்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் சிலர் ,கிண்டல் செய்யும் விதமாக அதிக விலை கொடுத்து வாங்கிய சொகுசு கார்க்கு பதிலாக அந்தப் பணத்தில் பலர்க்கு உதவி செய்திருக்கலாம் என வலியுறுத்தியுள்ளனர்.
மலையாளதில் பிரபல இளம் நடிகை அஹானா கிருஷ்ணனா எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். “தங்கள் பொறாமையைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், இந்த மாதிரி விஷத்தைக் கக்குகின்றனர். இதுபோன்ற கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு, நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன், அது பொறாமை தவிர வேறு ஒன்றும் இல்லை. மற்றவர்கள் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைய முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழ்நிலைகளில் உங்கள் வாயை மூடிக்கொள்ள இது உங்களுக்கு உதவும்”என்று கூறியுள்ளரர்.