பாஸ்ட்புட்க்கு அடிமையான சிறுவன் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம்-கீதா தம்பதியினர் இவர்களது மகன் ஹரிகுமார் பாஸ்ட்புட்க்கு அடிமையானவர். எப்போதும் பாஸ்ட்புட்களை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்த இவர் வேறு உணவுகள் வாங்கி கொடுத்தால் சாப்பிட மறுத்துள்ளார். பெற்றோர்கள் பலமுறை பாஸ்ட்புட் உடல் நலத்திற்கு கேடு என்று கூறியும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பாஸ்ட்புட் வாங்கி கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்துள்ளார்.
இதனால் பெற்றோர் வேறு வழியின்றி கேட்கும்போதெல்லாம் பாஸ்ட்புட் வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஹரிகுமார் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தபோது குடல் புண் அதிகமாக இருந்தது தான் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. குழந்தைகள் பாஸ்ட்புட் கேட்டு அடம்பிடிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக பெற்றோர்கள் உடனே வாங்கி கொடுப்பதை விட அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.