Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இன்று முதல் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!

பொதுமக்கள் கொண்டாடும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு எதுவாக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக வேலை வாய்ப்பிற்காக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அதிகப்படியான பேருந்து வசதிகள் இயக்கப்படுகின்றன. பல பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்து மூலமாக அவரவர் ஊர்களுக்கு திரும்ப அரசு வழிவகை செய்து வருகிறது.

அதே போல தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் சிறப்பு பஸ் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மேலும் ஆம்னிபஸ் இயக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் பொதுமக்கள் அரசு பேருந்துகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விரைந்து முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |