தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்தீப்-தேவிகா தம்பதியினர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்தீப் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்து வந்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியாத மனைவி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார்.
இதனால் கூலிப்படையை சேர்ந்த சந்தன் மற்றும் சுனில் ஆகிய இருவரிடமும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனது கணவரை கொலை செய்ய திட்டம் போட்டுக் கொடுத்தார். அவர்கள் இருவரும் அதன்படி ஜெய்தீப் மது போதையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் பலரது செல்போன் பதிவுகளை ஆராய்ந்தனர்.
அப்போது ஜெய்தீப் மனைவி தேவிகா தான் கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கூலிப்படை கொலையாளிகளில் ஒருவரான சந்தன் மற்றும் தேவிகாவை காவல்துறையினர் கைதுசெய்தனர். மற்றொரு குற்றவாளியான சுனிலை விரைந்து தேடி வருகின்றனர்.