உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற மாவட்டத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்பவர் அந்த சிறுமிகள் மீது ஆசிட் வீசிய உள்ளார். அதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுமிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதுமட்டுமன்றி தப்பி ஓட முயற்சி செய்த அந்த நபரை போலீசார் சுட்டு பிடித்து கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று சகோதரிகளில் மூத்த சகோதரியை அந்த நபர் ஒருதலையாக காதலித்து வந்ததும், அவரின் காதலை அந்தப் பெண் ஏற்காததால் ஆசிட் வீசியதும் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக மாவட்ட எஸ்பி கூறியுள்ளார்.