காற்று மாசு பிரச்சினை டெல்லியில் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதும் இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் திரு. மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு வழக்கமாக அதிகரித்து காணப்படும் நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மாசுயின் அளவு குறைந்தது. இதனிடையே கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிரடியாக உயர்ந்து மோசமடைந்தது. மாசுவை குறைக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் காற்று மாசு பிரச்சனை அதிலும் குறிப்பாக அறுவடையில் எஞ்சிய பயிர் தாள்களை எரிப்பதால் ஏற்படும் மாசு டெல்லியில் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதும் இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் திரு. மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியை மற்றும் குறை கூறாமல் வட இந்தியா முழுவதும் மாசுவை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்