திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.
ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரி செலுத்தி உள்ளார். இதற்கு அடுத்தகட்ட ஆறு மாதங்களாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் நாளையுடன் அக்டோபர் 14ஆம் தேதி வரியைச் செலுத்த வேண்டும் என்றும், அதைச் செலுத்தா விட்டால் இரண்டு சதவீதம் அபராதம் மற்றும் வட்டியுடன் கூடிய தொகை வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி பேரிடர் காலங்களில் திருமண மண்டபங்கள் வரி செலுத்தும் தொகையை பாதியாக குறைக்க வேண்டும் என்று மாநகராட்சியில் விதிகள் உள்ளது. எனவே அதன் அடிப்படையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரியை பாதியாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதற்க்கு மாநகராட்சி சார்பில் எந்த பதிலும் சொல்லாத நிலையில் ரஜினி சார்பில் உயர் நீதிமன்றம் நாடபட்டது.
கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தனது வரியை குறைக்க வேண்டும் என்று ரஜினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு பத்து நாட்களுக்கு உள்ளாகவே உயர்நீதிமன்றத்தை எப்படி நாடியுள்ளீர்கள் ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.ஒரு மனுவை அனுப்பி விட்டு அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வழங்க வேண்டுமென்றும், அவ்வாறு அவகாசம் வழங்க முடிவு எடுக்காவிட்டால் நினைவூட்டல் கடிதங்கள் இருக்கின்றது. அந்த கடிதங்களை மாநகராட்சி அனுப்பலாம் என நீதிபதிகள் தெரிவித்தன.
அதனை விட்டுவிட்டு ஒரு வாரத்தில் நீதிமன்றத்தை நாடியது ஏன் ? என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் ரஜினி தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். அப்போது இந்த வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்கு தொடர்வதாகவும் ரஜினி தரப்பு தெரிவித்துள்ளது.