தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் போராட்டம்.
கடலூர், நாகை மாவட்டங்களில் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் ஆதிக்க சாதியினர் செயல்படவிடாமல் அவமதிப்பதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இறுதியூர் ஊராட்சி தலைவர் தக்ஷிணாமூர்த்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் உறுப்பினர்களும் தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டி ஒன்றிய அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவியும் தன்னை அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.