மத்திய நிதியமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று அறிவித்த நிதி தொகுப்பு மலையைத் தோண்டி எலியை பிடிப்பதற்கு சமம் என முன்னாள் நிதியமைச்சர் திரு. பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
காணொளி காட்சி மூலம் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த திரு. பா. சிதம்பரம் ஏற்கனவே அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு தோல்வி அடைந்துவிட்டதை ஒப்புக் கொண்டதலயே மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் ஆனால் இதுவும் ஏமாற்று வேலையை எனவும் விமர்சித்துள்ளார்.
தொகையை மட்டும் பெரிதாக அறிவித்து மத்திய அரசு மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் இவை ஒரு போதும் மக்களின் தேவையை தீர்க்காது எனவும் திரு. பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தங்களது சொந்த பணத்தை எப்படி செலவழிப்பது என பொது மக்களின் வாழ்க்கையில் தலையிட மத்திய அரசு முயற்சிப்பதாக திரு. பா. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.