உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர்கள் வரை விட்டு வைக்கவில்லை.திரை பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் என பலரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்திலும் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமுமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெற்றிவேல் ஏற்கனவே இருதய சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அவரது குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.