ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. அதனால் கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.அதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.