Categories
தேசிய செய்திகள்

இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீர்… திட்டம் தீட்டும் பாகிஸ்தான்… வெளியான தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பண்டிகை காலங்களில் இந்துக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வகுப்புவாத விளைவுகளை உருவாக்கும் முயற்சியில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. உளவுத்துறை அளித்த தகவலில், “ஜம்மு காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பகுதிகளில் தாக்குதலை நடத்துவதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் முன்னாள் மூத்த புலனாய்வு அதிகாரியின் கீழ் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |