மாதுளையின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
மாதுளையில் 3 வகைகள் உள்ளன, அவை இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை ஆகியனவாகும். மாதுளம் பழத்தில், வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
மாதுளம் பழத்தை தினசரி உண்டு வந்தால், பித்தநோய்கள், வரட்டு இருமல், வயிறு குடல் புண்கள் (அல்சர்) எளிதில் குணமாகும். மேலும் ஈரல், இதயம் வலுபட்டு, ஜீரண சக்தி மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மாதுளம் பழச்சாற்றுடன், எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.
மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.மாதுளம் பிஞ்சை குடிநீரில் அல்லது தயிரில் கலந்து குடித்து வர, சீதபேதி, கழிச்சல் குணமாகும். மாதுளம் பூக்களை நன்கு காயவைத்து பொடி செய்து இருமல் ஏற்படும் நேரத்தில் சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.
மாதுளம் பூவுடன், சம அளவு மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடி செய்து காலை மாலை என இருவேளையும், 45 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் சீராகும்.