Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவ பலன் நிறைந்த…அதிசய கனி…எலுமிச்சை…!!

எலும்பிச்சை பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்:

எலுமிச்சை கனியின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். ‘ஸ்கர்வி நோய்’ மற்றும் வைட்டமின் சி குறைவினால் வரும் நோய்க்கு எதிரானது. பசியை தூண்டுதல், வயிற்று வலி, வாந்தி ஆகியவை குணப்படுத்தும்.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷக்கடி உடனே இறங்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்துகுளித்து வர பித்த வெறி, உடல் உஷ்ணம் குறையும்.

நகச்சுற்று ஏற்பட்டால், எலுமிச்சைப் பழத்தின் உள்ளே விரலை சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும், அதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

காபி அல்லது தேநீரில் பாதி எலும்பிச்சை பழத்தின் சாறை கலந்து குடித்து வர தலைவலி குணமாகும்.

எலும்பிச்சை பழ சாறெடுத்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும்.

Categories

Tech |