உத்திரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மீது அமிலம் வீசிய கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பாட்ஷா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது சமூக விரோதிகள் அவர்கள் மீது ஆசிட் வீசிய தால் மூவரும் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஹஸுஸ் என்ற நபரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஈடுபடுபவர் காப்பாற்றும் நடவடிக்கையிலும் குற்றச் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சியிலும் யோகி ஆதித்யநாத் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.