திராட்சைப்பழம் மற்றும் சாற்றில் இருக்கும் பயன்கள் பற்றி காணலாம்:
திராட்சைப்பழம், ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாகும். அதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்களை கொண்டுள்ளது.
தினசரி திராட்சையை உட்கொண்டால் உடல் வறட்சி, பித்தம் நீங்குவதுடன், உடம்பிலுள்ள ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். செரிமான கோளாறுகள் தீரும்.
திராட்சைப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக அருந்தி வர இதயபடபடப்பு நீங்கி இதயம் பலப்படும்.
உலர்ந்த திராட்சையை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல்,நாவறட்சி மற்றும் மயக்கம் குணமாகும்.
உலர்ந்த திராட்சை பழங்களை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அதைப் எடுத்து சுத்தமான நீரில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
திராட்சைப் பழத்துடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும். கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை அருந்தி வர அதிகப்படியான கொழுப்புச் சத்து குறையும்.
கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நீங்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் தீரும். காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினமும் திராட்சை பழம் சாப்பிட்டு வர நோயின் தன்மை குறையும்.