மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான கணவர் வேறு திருமணம் செய்ய போவதை அறிந்த மனைவி சினிமா பாணியில் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்
ஜாம்பியா நாட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தேவாலயத்தின் உள்ளே மணமகளுடன் மணமகனாக திருமணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். அச்சமயம் தேவாலயத்தின் உள்ளே திடீரென குழந்தையுடன் வந்த பெண் தமிழ் திரைப்பட பாணியில் திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார்.
திருமணத்திற்கு வந்த பலரும் திகைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்க்க அவர் “இது எனது கணவர். இதுவரை நாங்கள் விவாகரத்து செய்யவில்லை செய்துகொள்ளவில்லை. எங்களிடையே எந்த தகராறும் இல்லை. இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக்கு எதுவும் புரியவில்லை” என சத்தமிட்டாள்.
திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் வேலைக்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பிய அவர் தேவாலயத்தில் திருமணம் செய்ய வந்துள்ளார். இதனை பார்த்து யாரோ ஒருவர் ஆபிரகாமின் மனைவிக்கு தகவல் தெரிவிக்க கணவனுக்கு திருமணம் நடந்து விடுமோ என்று ஓடி வந்திருக்கிறார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்றால் மணமகளாக நிற்கும் பெண்ணிடம் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. அவருக்கு ஏற்கனவே ஆபிரகாம் திருமணமானவர் என்பது தெரிந்துள்ளது. ஜாம்பியாவில் பாரம்பரிய சட்டத்தின் அடிப்படையில் ஒரு ஆண் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் அதே நாட்டில் நவயுக சட்டத்தின் அடிப்படையில் இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு ஏழு வருடம் சிறை தண்டனை வழங்கப்படுகின்றது. காவல்துறையினர் ஆபிரகாமை கைது செய்த நிலையில் குடும்பத்தினர் அடுத்ததாக என்ன செய்வது என விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.