மகரம் ராசி அன்பர்களே..!
இன்று சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள் ஆனாலும் திட்டமிட்டு பணியாற்றினால் இந்த நாளை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். அதிகரிக்கும் பணிகளை சமாளிக்க நேரிடும்.
இதனால் தேவையற்ற தவறுகள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் பணிகளை கையாள்வது நல்லது. உங்களின் துணையின் நடத்தை எரிச்சலை ஏற்படுத்தும். அமைதியாக இருந்து அறிவுபூர்வமாக பிரச்சனைகளை கையாளவேண்டும். இன்று நிதிநிலையில் கட்டுப்பாடு காணப்படும். தேவையற்ற செலவுகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். செரிமானம் சம்பந்தபட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் இன்று ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியிடங்களில் உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.