கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் சுபகாரியங்களில் பங்குக் கொள்வீர்கள். புதிய நபர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்படுவார்கள். உங்களின் பணியில் நல்லப்பெயர் எடுப்பீர்கள். சக பணியாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உங்களின் துணையுடனான உறவில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நல்லுறவை ஏற்படுத்த உங்களின் துணையுடன் மனம் திறந்து பேசவேண்டும். இன்று பணவரவு அதிகரித்துக் காணப்படும். இன்று பங்குவர்த்தகம் லாபம் தரும். மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளலாம். நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொண்டால் நல்லபலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.