போதைக்கு அடிமையான இளைஞன் தன்னை பார்த்துக்கொண்ட பாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரது பெற்றோர் கிறிஸ்டோபரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டனர். அதன்பிறகு கிறிஸ்டோபரின் தாய் மற்றும் தந்தை இஸ்ரேலுக்கு சென்றுவிட்டனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடித்து வந்த கிரிஸ்டோபரை அவரது பாட்டி அன்புடன் பார்த்துக்கொண்டார்.
கடந்த திங்கள் அன்று கிறிஸ்டோபர் மீண்டும் போதை பொருட்களை உபயோகிக்க தொடங்கியுள்ளார். இதனை அறிந்த பாட்டி கிறிஸ்டோபரை கடுமையாக திட்டி அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். கிறிஸ்டோபர் பேச முயற்சித்தாலும் பாட்டி புறக்கணித்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிறிஸ்டோபர் தனது பாட்டி ரோஸியை துண்டு துண்டாக வெட்டி அவரது உடல் பாகங்களை அறை முழுவதும் வீசி எறிந்தார்.
பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து பாட்டியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிறிஸ்டோபரின் தந்தை விரைந்து சென்று பார்த்தபோது தனது தாய் இறந்து கிடப்பதைப் பார்த்து கதறி அழுதார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் கிறிஸ்டோபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.