அமெரிக்காவில் விரைவில் கொரோனாவை ஒலிக்கப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தேர்தல் ஒரு எளிய தேர்வு. பிடன் வெற்றி கண்டால், சீனா வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம். நாம் கொரோனாவை மிக விரைவில் அளிக்கப் போகிறோம். அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி விவாதத்தில் பிடனுக்கு ஒரு நாய் போன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பென்சில்வேனியாவின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக களில் மோசடி இருந்து கொண்டிருக்கிறது.
அதனால் மோசடிகளை விரைவில் ஒழிப்பதாக ஜோ பிடன் பலமுறை உறுதியளித்திருக்கிறார். அவர் மார்க்சிஸ்டுகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகளுக்கு கட்டுப்பாட்டை ஒப்படைத்துள்ளார். அவர் தனது கட்சியை வழிநடத்தும் பைத்தியகாரர்கள் துணையாக நிற்க முடியாது. நீங்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்காக மன்னிப்பு கேட்ட ஒரு ஜனாதிபதியை கொண்டிருந்தீர்கள். தற்போது நீங்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாக நின்று கொண்டிருக்கும் ஒரு ஜனாதிபதியுடன் பென்சில்வேனியாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்”என்று அவர் கூறியுள்ளார்.